முட்டை விலை 5 காசுகள் உயர்வு


முட்டை விலை 5 காசுகள் உயர்வு
x

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்தது.

நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 425 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனிடையே கறிக்கோழி கிலோ ரூ.103-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை மேலும் ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.105 ஆக ஆனது.

மேலும் முட்டைக்கோழி கிலோ ரூ.78-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவற்றின் விலையில் மாற்றம் ஏதும் இல்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story