முட்டை விலை 10 காசுகள் உயர்வு


முட்டை விலை 10 காசுகள் உயர்வு
x

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்தது.

நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 435 காசுகளாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 445 காசுகளாக உயர்ந்து உள்ளது. இதேபோல் ஏற்றுமதி ரக முட்டையின் கொள்முதல் விலை 435 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

முட்டைக்கோழி கிலோ ரூ.83-க்கும், கறிக்கோழி கிலோ ரூ.105-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story