முட்டை விலை 20 காசுகள் உயர்வு


முட்டை விலை 20 காசுகள் உயர்வு
x

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் உயர்ந்துள்ளது.

நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 20 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக அதிகரித்து உள்ளது.

கோடை வெயிலின் தாக்கத்தால் முட்டை உற்பத்தி குறைந்து உள்ள நிலையில், ரம்ஜான் நோன்பு முடிவடைந்து விட்டதால் முட்டையின் தேவை அதிகரித்து உள்ளது. இதுவே முட்டை கொள்முதல் விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

முட்டைக்கோழி கிலோ ரூ.77-க்கும், கறிக்கோழி கிலோ ரூ.107-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

முட்டை விலை உயர்வு குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-

தமிழகத்தில் கடும் வெயில் காரணமாக கோழிகள் சரியாக தீவனம் எடுத்துக் கொள்வதில்லை. இரவில் மட்டுமே தீவனம் எடுக்கிறது. அதுவும் 110 கிராமிற்கு பதில் 90 கிராம் மட்டுமே உட்கொள்கிறது. அதனால் முட்டை உற்பத்தி 10 முதல் 15 சதவீதம் வரை குறைந்து உள்ளது. அதாவது தினசரி 50 லட்சம் முதல் 70 லட்சம் முட்டை வரை உற்பத்தி சரிந்துள்ளது. இதுவே முட்டை கொள்முதல் விலை உயர்வுக்கு காரணம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story