நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு



நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து முட்டை கொள்முதல் விலை 455 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனிடையே தொடர்ந்து 5-வது நாளாக முட்டை கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கறிக்கோழி கிலோ ரூ.93-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.78-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவற்றின் விலைகளில் மாற்றம் ஏதும் இல்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire