நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்தது


நாமக்கல் மண்டலத்தில்  முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்தது
x

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்தது

நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக இருந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

மேலும் முட்டைக்கோழி கிலோ ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது‌. இதனிடையே நேற்று நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.5 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால் முட்டைக்கோழியின் விலை கிலோவுக்கு ரூ.100-ஆக உயர்ந்தது. கறிக்கோழி கிலோ ரூ.91-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது‌. அவற்றின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story