கத்தரிக்காய் விலை கிடுகிடு உயர்வு


கத்தரிக்காய் விலை கிடுகிடு உயர்வு
x

புதுக்கோட்டைக்கு வரத்து குறைவு எதிரொலியால் கத்தரிக்காய் விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது. கிலோ ரூ.100-க்கு விற்பனையாகிறது.

புதுக்கோட்டை

கத்தரிக்காய்

புதுக்கோட்டை உழவர் சந்தைக்கு கத்தரிக்காய் வரத்து தற்போது குறைந்துள்ளது. இதனால் அதன் விலை கடந்த ஓரிரு நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.90 முதல் ரூ.100-க்கு விற்பனையானது. மார்க்கெட்டில் சில்லரை கடைகளிலும் கிலோ ரூ.90 முதல் ரூ.100-க்கு விற்றதாக உழவர்சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விலையேற்றத்திற்கு காரணம் தற்போது மழையின் காரணமாக விளைச்சல் பாதிப்படைந்துள்ளதாகவும், அதனால் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்தனர். இதேபோல் ஒரு சில காய்கறிகளின் விலைகளும் சற்று உயர்ந்துள்ளது.

அவரைக்காய் கிலோ ரூ.70

புதுக்கோட்டை உழவர்சந்தையில் விற்பனையான காய்கறிகளில் சிலவற்றின் விலை கிலோ கணக்கில் வருமாறு:- அவரைக்காய் ரூ.70-க்கும், கேரட் ரூ.60-க்கும், பீட்ரூட் ரூ.40-க்கும், குடை மிளகாய் ரூ.80-க்கும், பச்சை மிளகாய் ரூ.40-க்கும், முருங்கைக்காய் ரூ.70-க்கும், தக்காளி ரூ.20-க்கும், வெண்டைக்காய் ரூ.25-க்கும், புடலங்காய் ரூ.25-க்கும், பீர்க்கங்காய் ரூ.35-க்கும், பாகற்காய் ரூ.55-க்கும், முட்டைகோஸ் ரூ.30-க்கும், சுரக்காய் ரூ.20-க்கும், சின்ன வெங்காயம் ரூ.70-க்கும், பெரிய வெங்காயம் ரூ.50-க்கும், சேனை கிழங்கு ரூ.50-க்கும், கருணை கிழங்கு ரூ.35-க்கும், உருளைக்கிழங்கு ரூ.60-க்கும் விற்பனையானது.


Next Story