இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரிக்கு தரச்சான்று
நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரிக்கு தரச்சான்று
நாகப்பட்டினம்
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியின் செயல்பாடு மற்றும் கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்து, இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு ஆய்வு செய்து, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று பட்டியலில், இந்த கல்லூரிக்கு ஏ பிளஸ் பிளஸ் தரமதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழை இ.ஜி.எஸ். பிள்ளை கல்விக்குழும தலைவர் ஜோதிமணி அம்மாள், செயலர் செந்தில்குமார், இணைச்செயலர் சங்கர்கணேஷ் ஆகியோருடன் பொறியியல் கல்லூரி முதல்வர் ராமபாலன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் சந்திரசேகர், கல்விசார் இயக்குனர் மோகன், நிர்வாக தலைவர் மணிகண்ட குமரன் ஆகியோர், இந்த சான்றிதழ் கிடைத்தமைக்கு அயராது உழைத்த அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story