இ.ஜி.எஸ்.பிள்ளை செவிலியர் கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு
இ.ஜி.எஸ்.பிள்ளை செவிலியர் கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
நாகப்பட்டினம்
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை செவிலியர் கல்லூரி மற்றும் பயிற்சி பள்ளியில் மாணவிகளுக்கான விளக்கேற்றி உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி இணைச் செயலாளர் சங்கர் கணேஷ் முன்னிலை வகித்தார். விழாவை கல்லூரி தலைவர் ஜோதிமணி அம்மாள் தொடங்கி வைத்தார்.நாகை அரசு சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் விஜயக்குமார்,கல்லூரி ஆலோசகர் பரமேஸ்வரன், கல்விசார் இயக்குனர் மோகன், நிர்வாக தலைவர் மணிகண்ட குமரன் ஆகியோர் பேசினர். விழாவில் அனைத்து மாணவிகளும் நைட்டிங்கேல் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். விழாவில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவி வரவேற்றார். முடிவில் கல்லூரி உதவிப் பேராசிரியர் குணசித்ரா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story