கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு


கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு
x
தினத்தந்தி 21 May 2023 12:15 AM IST (Updated: 21 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் அருகே பி.நெடுவயல் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

சிவகங்கை

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அருகே பி.நெடுவயல் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே பி.நெடுவயல் கிராமத்தில் உள்ள ஆதினமிளகி அய்யனார் கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. இதில் முன்னதாக கிராம மக்கள் கோவில்களில் இருந்து வேட்டி, துண்டு எடுத்து ஊர்வலமாக மஞ்சுவிரட்டு திடலை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து கோவில் காளைகளுக்கு மாலை, வேட்டி, துண்டு அணிவித்து முதலாவதாக அவிழ்த்து விட்டனர்.

அதனை தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. சில காளைகள் பிடிபட்டும், பல காளைகள் காளையர்களிடம் பிடிபடாமல் சென்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்குபெற்றது. இதில் சுமார் 10 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலமாக முதலுதவி அளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பலர் கத்தரி வெயிலையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டனர்.

வழக்கு பதிவு

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடைபெற்றதாக கே.நெடுவயல் கிராம நிர்வாக அதிகாரி கோமதி கொடுத்த புகாரின் பேரில் பி.நெடுவயல் கிராமத்தைச் சேர்ந்த அபுபக்கர்சித்திக், அழகு, குமார், சிவப்பிரகாஷ், மாதவன், சுப்பிரமணியன் ஆகிய 6 பேர் மீது உலகம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story