ஏகாம்பரேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்


ஏகாம்பரேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்
x

கலவை அருகே ஏகாம்பரேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

ராணிப்பேட்டை

கலவையை அடுத்த குட்டியம் கிராமத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை யாகசாலையில் வைத்து, கோ பூஜை, வாஸ்து பூஜை, விக்னேஸ்வர பூஜை மற்றும் 4 கால யாக பூஜை நடந்தது.

நேற்று காலை கோவில் கலசத்தில் புனிதநீரை ஊற்றி அர்ச்சகர்கள் மகா குமபாபிஷேகத்தை நடத்தினர். அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். புனிதநீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தில் ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன், திமிரி ஒன்றியக்குழு தலைவர் அசோக், ஒன்றியக்குழு துணைத் தலைவர் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், கோவில் நிர்வாகி ராஜேஸ்வரன், சுரேஷ் மற்றும் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story