முதியவர் போக்சோவில் கைது


முதியவர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே விராலூர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 65). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்த 11-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியிடம் உனது போட்டோவை நான் எடுத்து வைத்துள்ளேன். அதனால் இப்போது நீ, எனது வீட்டுக்கு வரவில்லை என்றால் உனது போட்டோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த அந்த சிறுமி, தனது உடல்நிலை பாதிப்புக்கு வழக்கம் போல் சாப்பிடும் மாத்திரையை விட கூடுதலாக சாப்பிட்டுள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நாகவள்ளி மற்றும் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அன்பழகனை கைது செய்தனர்.


Next Story