விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 2 Sept 2023 2:00 AM IST (Updated: 2 Sept 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்துகொண்டார்.

கோயம்புத்தூர்


பெரியநாயக்கன்பாளையம்

பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவிந்த நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 70). இவர் கடந்த 20 ஆண்டுகளாக தொழுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதற்கு சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்த பழனிசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story