விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 11:56 AM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை அடுத்த நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் (வயது 56). இவரது மனைவி அருக்காணி. இந்நிலையில் கனகராஜ்க்கு சரிவர கண் பார்வை தெரியாது. இந்நிலையில் கடந்த 10-ந் தேதி கனகராஜ் விஷம் குடித்துவிட்டு அவரது வீட்டில் திடீரென வாந்தி எடுத்தார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story