முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை


முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

சுசீந்திரம் அருகே உள்ள ஆஸ்ரமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியபிள்ளை (வயது 61). இவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்து வந்ததாகவும், அதற்கு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அதனால் மனவேதனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் சுப்பிரமணியபிள்ளை வீட்டின் மாடியில் உள்ள படுக்கை அறையில் தூங்குவதற்கு சென்றார். காலையில் மனைவி ஜலஜா சென்று பார்த்தபோது, அங்கு மின்விசிறியில் சுப்பிரமணியபிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுபற்றி அவருடைய மனைவி ஜலஜா சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story