மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு


மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 3:42 PM IST)
t-max-icont-min-icon

கீழப்பாவூரில் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த முதியவர் இறந்தார்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் கீரைத்தோட்ட தெருவில் வசித்து வந்தவர் ராமசாமி (வயது 67). இவருக்கு சில ஆண்டுகளாக பார்வை குறைபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் தினமும் அவரது வீட்டு மாடியில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

நேற்று அதேபோல் நடைப்பயிற்சி மேற்கொண்டு விட்டு மாடிப்படி வழியாக இறங்கி வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமசாமிக்கு சுடர்ஒழிவு என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.


Next Story