மது போதையில் விழுந்த முதியவர் சாவு


மது போதையில் விழுந்த முதியவர் சாவு
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மது போதையில் விழுந்த முதியவர் இறந்தார்.

கோயம்புத்தூர்

ஆனைமலை,

ஆனைமலை அடுத்த அங்கலகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஞான சம்பந்தன் (வயது 62), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 23-ந் தேதி அங்கலகுறிச்சியில் இருந்து பஸ்சில் சென்று, சங்கம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததால் தள்ளாடியபடி சாலையோரத்தில் விழுந்தார். அதன் பின்னர் 2 நாட்களாகியும் ஞானசம்பந்தன் எழவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்த போது, ஞானசம்பந்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story