மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு


மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
x

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் இறந்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் இறந்தார்.

நாகா்கோவில் தளவாய்புரத்தை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது 60). இவர் இரவு புன்னைநகர் லூர்து அன்னை சாலையில் நடந்து சென்றார். அப்போது அவருக்கு பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கிறிஸ்துதாஸ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் கிறிஸ்துதாஸ் படுகாயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்த போது கிறிஸ்துதாஸ் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உடல் பிணவறைக்கு எடுத்து செல்லப்பட்டது.

இச்சம்பவம் குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கிறிஸ்துதாஸ் மீது மோதிய மோட்டார் சைக்கிளில் வந்தவர் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story