தனியார் பஸ் மோதி முதியவர் பலி


தனியார் பஸ் மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 24 Sept 2023 12:15 AM IST (Updated: 24 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தனியார் பஸ் மோதி முதியவர் பலி

விருதுநகர்


சிவகாசி அருகே உள்ள மயிலாடுதுறை கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 64). இவர் மயிலாடுதுறை விலக்கிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே படுகாயத்துடன் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவரது மகன் சரவணகுமார் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் பஸ் டிரைவர் நென்மேனியைச் சேர்ந்த முத்தையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story