வாகனம் மோதி முதியவர் படுகாயம்


வாகனம் மோதி முதியவர் படுகாயம்
x
தினத்தந்தி 21 July 2023 1:45 AM IST (Updated: 21 July 2023 1:46 AM IST)
t-max-icont-min-icon

வாகனம் மோதி முதியவர் படுகாயம்

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமத்தை அடுத்த சிறுகளந்தை பஸ் நிலையம் அருகே முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று திடீரென அவர் மீது ேமாதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story