முதியவர் விஷம் குடித்து தற்கொலை


முதியவர் விஷம் குடித்து தற்கொலை
x

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

பூதப்பாண்டி அருகே உள்ள காட்டுபுதூர் பகுதியை சேர்ந்தவர் செல்லம் (வயது 65). இவருடைய மனைவியும், பிள்ளையும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டனர். இதனால், செல்லம் வீட்டில் தனியாக வசித்து வந்தார். தனிமையில் வசித்து வந்த செல்லம் வாழ்க்கையில் வெறுப்படைந்து கடந்த சில நாட்களாக மனமுைடந்த நிலையில் காணப்பட்டு வந்தார். சம்பவத்தன்று செல்லம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பூதப்பாண்டி போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று செல்லத்தின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-**


Next Story