முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x

முதியவர் தற்கொலை

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே உள்ள மணலி மருதவிளையை சேர்ந்தவர் மரிய தங்கம் (வயது 77). இவருடைய மனைவி 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

மகன் லாசர் (44) வீட்டில் வசித்து வந்த மரிய தங்கம் சமீப காலமாக மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு விஷப் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து விட்டார். இதனால் வாயில் வாயில் நுரைதள்ளியபடி அவர் கிடந்தார். உடனே அவரை மகன் லாசர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை மரிய தங்கம் இறந்து விட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story