முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 2 May 2023 6:45 PM GMT (Updated: 2 May 2023 6:46 PM GMT)

முதியவர் தற்கொலை

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டாரை அடுத்த செட்டிச்சார்விளை கொல்லிக்கோட்டுவிளையை சேர்ந்தவர் தேவசிகாமணி (வயது 71). இவருடைய மனைவி மரிய புஷ்பம். இவர்களுடைய மகன் பைஜூ. மரிய புஷ்பத்துக்கு கால்முட்டியில் தேய்மானம் ஏற்பட்டு நடக்க இயலாத நிலை ஏற்பட்டது. அதற்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தேவசிகாமணி வருத்தத்தில் அதிகமாக மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு வீட்டின் பின்புறம் ே்தவசிகாமணி விஷம் குடித்து ரத்தவாந்தி எடுத்தார். உடனே அவரை பைஜூ மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தேவசிகாமணி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பைஜூ அளித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story