கருங்கல் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை


கருங்கல் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
x

கருங்கல் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

கருங்கல்:

கருங்கல் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

கருங்கல் அருகே உள்ள கப்பியறை பொதுவல்விளையை சேர்ந்தவர் கனகையன். இவரது மனைவி மேரி (வயது63). இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் 2 மகன்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால், மேரி மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று மேரி வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story