டிராக்டர் டிப்பர் கதவு அடித்ததில் படுகாயமடைந்த மூதாட்டி சாவு


டிராக்டர் டிப்பர் கதவு அடித்ததில் படுகாயமடைந்த மூதாட்டி சாவு
x

டிராக்டர் டிப்பர் கதவு அடித்ததில் படுகாயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார்.

பெரம்பலூர்

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, சிறுகளப்பூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பு. இவரது மனைவி விஜயா(வயது 70). இவர் கடந்த 23-ந் தேதி பெரம்பலூர் மாவட்டம், நொச்சியம் கிராமத்தில் நடந்த கோவில் தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக உறவினர் சுரேஷ் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது இரவில் விஜயா இயற்கை உபாதை கழிப்பதற்காக நொச்சியத்தில் இருந்து சிறுவாச்சூருக்கு செல்லும் குறுக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நொச்சியத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் டிராக்டர் ஓட்டி வந்தார். அந்த டிராக்டர் பின்னால் உள்ள டிப்பரில் (பெட்டி) திறந்த நிலையில் இருந்த கதவு சாலையோரம் நின்று கொண்டிருந்த விஜயா மீது அடித்தது. இதில் படுகாயமடைந்த விஜயாவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயா நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக விஜயாவின் மகன் செல்வராசு கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசாா் டிராக்டர் டிரைவர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story