மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு போட்டி
மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.
சிவகங்கை
இளையான்குடி
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக தேர்தல் விழிப்புணர்வு கழகம் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தேர்தல் விழிப்புணர்வு சுவரொட்டி தயாரித்தல் போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசுகளை வழங்கினார். நேரு யுவகேந்திரா அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் கலந்துகொண்டு சிறந்த படைப்புகளை தேர்வு செய்தார். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, ஷேக் அப்துல்லா, பாத்திமா கனி ஆகியோர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story