2 ஆயிரம் மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு கையேடு


2 ஆயிரம் மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு கையேடு
x
தினத்தந்தி 17 Aug 2023 1:45 AM IST (Updated: 17 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல்

தேர்தல் கல்விக்குழு

உள்ளாட்சி, சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாக வேண்டும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் இலக்காக வைத்துள்ளது. இதையொட்டி 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

மேலும் மாணவர்களிடம் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளி, கல்லூரிகளில் தேர்தல் கல்விக்குழு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு தேர்தல் மற்றும் வாக்குப்பதிவின் அவசியம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

2 ஆயிரம் கையேடுகள்

இந்த நிலையில் மாணவர்களுக்காக இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு கையேடு தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கையேட்டில் இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல்கள், வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் எந்திரங்கள் செயல்படும் விதம், அதன்பயன்பாடு குறித்தும் கையேட்டில் விளக்கம் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்பிலும் கேள்வி கேட்கப்பட்டு மாணவர்கள் விடை எழுதும் வகையில் பயிற்சி புத்தகம் போன்று கையேடு தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதன்மூலம் மாணவ-மாணவிகளுக்கு தேர்தல் தொடர்பாக அனைத்து விவரங்களும் தெரிய வாய்ப்பு உள்ளது. இந்த கையேடுகள் தேர்தல் கல்விக்குழுவில் இடம்பெற்றுள்ள மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதற்காக திண்டுக்கல் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 2 ஆயிரம் கையேடுகள் வந்துள்ளன. இவை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.


Next Story