தேர்தல் வழக்கு: முன்னாள் அமைச்சரிடம் சென்னை ஐகோர்ட்டில் குறுக்கு விசாரணை...!


தேர்தல் வழக்கு: முன்னாள் அமைச்சரிடம் சென்னை ஐகோர்ட்டில் குறுக்கு விசாரணை...!
x

தேர்தல் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சரிடம் சென்னை ஐகோர்ட்டில் குறுக்கு விசாரணை நடந்தது.

சென்னை,

தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆவடி தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட மா பா பாண்டியராஜன் ஆயிரத்து 395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஆவடி நாசர், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சரான மாபா பாண்டியராஜன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது, அவர் தனக்கு எதிராக ஆவடி நாசர் கூறியுள்ள தேர்தல் செலவு குற்றச்சாட்டை மறுத்தார்.

முறையாக தேர்தல் கணக்குகளை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார். இதையடுத்து, அவரிடம் மனுதாரர் தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார். இந்த குறுக்கு விசாரணை முடிவடையாததால், நாளை (வியாழக்கிழமை) இந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story