அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு - இனிப்பு வழங்கி தொண்டர்கள் கொண்டாட்டம்...!
இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை வரவேற்று தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
திருவண்ணாமலை,
சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை வரவேற்கும் விதமாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணாமலையார் கோவில் அருகில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பேரவை செயலாளர்வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் டிஸ்கோ குணசேகரன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் சுனில்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பர்குணகுமார் உட்பட திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story