பெரம்பலூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்


பெரம்பலூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்
x

பெரம்பலூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 23-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களில் இருந்து 10 உறுப்பினர்களும், நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்களிலிருந்து 2 உறுப்பினர்களும், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். வேட்பு மனுக்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பெற்று கொள்ளப்படும். கடந்த 7-ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். 12-ந்தேதி காலை 11 மணியளவில் வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். 14-ந்தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். 23-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடைபெறும். வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். 28-ந்தேதி முதல் கூட்டம் நடைபெறும். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும், என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story