தேர்தல் சிறப்பு பார்வையாளர் ஆய்வு

பெரியகுளம் நகராட்சி பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை தேர்தல் சிறப்பு பார்வையாளர் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தார்.
தேனி
தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் ஏற்கனவே நடந்து முடிந்தன. இந்த முகாம்களில் விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் சரியானதா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. அதில் பெரியகுளம் நகராட்சி பகுதியில் சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று தேனி மாவட்ட (வாக்காளர்பட்டியல்) தேர்தல் சிறப்பு பார்வையாளர் மகேஸ்வரன், மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் நகராட்சி ஆணையாளர் புனிதன், தாசில்தார் காதர் ஷெரீப் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story






