ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்கத்தின் பகிர்மான குழு தலைவர் பதவிக்கு நாளை தேர்தல்


ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்கத்தின் பகிர்மான குழு தலைவர் பதவிக்கு நாளை தேர்தல்
x
தினத்தந்தி 3 March 2023 12:15 AM IST (Updated: 3 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்கத்தின் பகிர்மான குழு தலைவர் பதவிக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்கத்தின் பகிர்மான குழு தலைவர் பதவிக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது.

பகிர்மான குழு தலைவர்

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகள் பயன்பெறுகின்றன. இந்த நிலையில் புதிய ஆயக்கட்டு பாசன சங்கத்தில் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டல குழு உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதை தொடர்ந்து புதிய ஆயக்கட்டில் 16 பாசன சங்க தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

பாசன சங்க தலைவர்கள் மூலம் பொள்ளாச்சி கால்வாய் பகிர்மான குழு தலைவர்-2, பகிர்மான குழு தலைவர்-3, வேட்டைக்காரன்புதூர் கால்வாய் பகிர்மான குழு, சேத்துமடை கால்வாய், ஆழியாறு ஊட்டுக்கால்வாய் பகிர்மான குழு தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார். இதற்காக பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இதையொட்டி காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகிறது. காலை 9.30 மணி முதல் 10 மணி வரை வேட்புமனுக்கள் பரிசீலனை மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. காலை 10 மணி முதல் 10.30 மணி வரை வேட்புமனுக்கள் திரும்ப பெறுதல், காலை 10.45 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. பகல் 11.30 மணி முதல் 12.15 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

உறுப்பினர் பதவி

பகிர்மான குழு உறுப்பினர் பதவிக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகிறது. மதியம் 2.30 மணி முதல் 3 மணி வரை வேட்புமனுக்கள் பரிசீலனை மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. மாலை 3 மணி முதல் 3.30 மணி வரை வேட்பு மனுக்கள் திரும்ப பெறுதல், அதை தொடர்ந்து 3.45 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

மாலை 4.30 மணி முதல் 5.15 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்பிறகுகு உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தலில் வாக்களிக்க பாசன சபை தலைவர்கள் வெற்றி பெற்ற அசல் தேர்தல் சான்றிதழுடன் வர வேண்டும். தேர்தல் அதிகாரியாக சப்-கலெக்டர் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட தகவல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

1 More update

Next Story