வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகளை தோ்தல் பார்வையாளர் ஆய்வு


வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகளை தோ்தல் பார்வையாளர் ஆய்வு
x

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.

கரூர்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2023 பணிகள் தொடர்பாக, கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த மற்றும் இடமாற்றம் செய்ய ஏதுவாக கடந்த 12.11.2022, 13.11.2022, 26.11.2022 மற்றும் 27.11.2022 அன்று அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் நடைபெற்ற சிறப்பு முகாம்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், https://www.nvsp.in, https://voterportal.eci.gov.in என்ற இணையதளங்கள் மற்றும் Voter Helpline என்ற மொபைல் செயலி மூலமாகவும் கடந்த 8-ந்தேதி வரை கரூர் மாவட்டத்தில் மனுக்கள் பெறப்பட்டன.

கரூர் மாவட்டத்தில் பெறப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாற்றம் தொடர்பான மனுக்களின் மீது வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரபுசங்கர் பஞ்சமாதேவி பகுதியில் 14-ந்தேதி மேலாய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் - 2023-ல் பெறப்பட்ட மனுக்களின் மீது வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனருமான மகேஸ்வரன் நேற்று பஞ்சமாதேவி பகுதியில் மேலாய்வு செய்தார்.


Next Story