3,254 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்


3,254 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 27 Nov 2022 1:45 AM IST (Updated: 27 Nov 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

11 சட்டசபை தொகுதிகளில் 2-ம் கட்டமாக 3,254 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாம் இன்றும் நடக்கிறது.

சேலம்

11 சட்டசபை தொகுதிகளில் 2-ம் கட்டமாக 3,254 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாம் இன்றும் நடக்கிறது.

சிறப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 3 ஆயிரத்து 254 வாக்குச்சாவடிகளில் நேற்று 2-ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது. 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம்-6, பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம்-7, குடியிருப்பை மாற்றியதற்கும்,

நடப்பு வாக்காளர் பட்டியலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கும், மாற்றுத்திறனாளிகளை குறிப்பதற்கும் படிவம்-8ஐ உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்றும் முகாம்

இதனால் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டினர். அவர்கள் தங்களது பெற்றோருடன் அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். அதேபோல், பெயர்களை நீக்கவும், முகவரி மாற்றம், திருத்தம் மேற்கொள்வதற்கு அதற்கான படிவங்களை பொதுமக்கள் வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தனர்.

2-வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெறுகிறது. ஏற்கனவே, கடந்த 12 மற்றும் 13-ந் தேதி மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் 24 ஆயிரத்து 782 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க புதிதாக விண்ணப்பம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story