வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்


வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்
x

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் 2-ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் நேற்று நடந்தது. இந்த முகாமில் 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கு படிவம் 6-ஐயும் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர் நீக்கம் திருத்தத்திற்கு படிவம் 7-ஐயும், திருத்தம் மேற்கொள்ள படிவம் 8-ஐயும், இடமாற்றம் திருத்தத்திற்கு படிவம் 8 ஏ-வையும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான திருத்தத்திற்கு படிவம் 6 ஏ-வையும் பயன்படுத்தி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தனர்.

இதில் 17 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட விண்ணப்பங்களை அளித்து முன்பதிவு செய்தனர். மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்து கொள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். முகாமில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்கள் உதவிபுரிந்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த முகாமிற்கான விண்ணப்பங்களை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ அல்லது அரசு வேலை நாட்களில் தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.


Next Story