சாலையின் நடுவே மின்கம்பம்
செம்பதனிருப்பு கிராமத்தில் சாலையின் நடுவே மின்கம்பம் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
செம்பதனிருப்பு கிராமத்தில் சாலையின் நடுவே மின்கம்பம் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மின்கம்பம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தெருவில் 50 ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவின் சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் இடையூறாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர்.
விவசாய தேவைக்கான இடுபொருட்கள், வைக்கோல் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை சரக்கு வாகனங்களில் அந்த வழியாக எடுத்து செல்ல முடியவில்லை. சரக்கு வாகனங்களை இந்த மின் கம்பத்தின் அருகே நிறுத்திவிட்டு பின்னர் பொருட்களை தலைசுமையாக கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது. இதன் காரணமாக அறுவடை காலங்களில் மிகுந்த சிரமமாக உள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
வேறு இடத்தில்...
இறந்தவர்களின் உடலை வாகனங்களில் எடுத்து செல்வதற்கும் இடையூறு ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த ேவதனையில் உள்ளனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'தெற்கு தெருவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வீதியின் நடுவே மின்கம்பம் அமைத்த போது, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனாலும் மின்வாரிய ஊழியர்கள் அதனை பொருட்படுத்தாமல் கம்பத்தை அமைத்து சென்று விட்டனர்.
இதற்கெல்லாம் மேலாக மின்கம்பத்தை வைத்து சிமெண்டு சாலையும் போடப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என கிடாரம் கொண்டான் மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இடையூறாக காணப்படும் மின்கம்பத்தை அகற்றி வேறு ஒரு இடத்தில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.