குளத்தின் அருகே உள்ள மின்கம்பம்
குளத்தின் அருகே உள்ள மின்கம்பத்தை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் முத்துசேர்வாமடம் கிராமத்தில் ஆயிரம் குட்டை என்ற குளம் உள்ளன. இந்த குளத்தில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குளிக்க பயன்படுத்தி வருகிறார்கள். கால்நடைகள் ஆங்கே ஆங்கே வந்து நீர் அருந்துகிறது. இந்த குளத்தின் கரையில் மின்கம்பவம் ஒன்று உள்ளது. இதில் இருந்து மின்சாரம் செல்கிறது. மழையின் காரணமாக மின்கம்பம் சாய்ந்து குளத்தில் விழுந்தால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story