மின்கம்பங்கள் மாற்று இடத்தில் நடப்பட்டன
சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த மின்கம்பங்கள் மாற்று இடத்தில் நடப்பட்டன
திருவெண்காடு:
திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் மேலவீதியில் சாலை பழுதடைந்து காணப்பட்டது. இதனை தொடர்ந்து சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.1.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியின் கீழ் சிமெண்டு சாலை மற்றும் வடிகால் வசதி செய்யும் பணி தொடங்கி நடந்து வருகிறது. சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக மின் கம்பங்கள் இருந்தன. இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினர், மின்வாரிய அதிகாரிகளிடம், இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றி தர வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதை அடுத்து சீர்காழி மின்வாரிய உதவி பொறியாளர் விஜய பாரதி மேற்பார்வையில் திருவெண்காடு மின்வாரிய உதவி பொறியாளர் ரமேஷ், ஆக்க முகவர் குணசேகரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.