சாய்ந்து விழும் நிலையில் மின்கம்பங்கள்


சாய்ந்து விழும் நிலையில் மின்கம்பங்கள்
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சாய்ந்து விழும் நிலையில் மின்கம்பங்கள்

கோயம்புத்தூர்

நெகமம்

செட்டியக்காபாளையம் ஊராட்சியில் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் பழுதடைந்து, எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. குறிப்பாக மின்கம்பங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் பலத்த மழை பெய்யும்போது, மின்கம்பங்களை தொட்டால் மின்சாரம் தாக்கும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, குடியிருப்பு பகுதியில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளதால், வெளியே நடமாடவே அச்சப்பட வேண்டிய நிலை உள்ளது. அதனருகில் விளையாடும் குழந்தைகள் ஆபத்தில் சிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே பழுதான மின்கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பங்கள் நட சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story