நீராவி ரெயில் என்ஜின் வடிவமைப்பில் மின்சார ரெயில்


நீராவி ரெயில் என்ஜின் வடிவமைப்பில் மின்சார ரெயில்
x

நீராவி ரெயில் என்ஜின் வடிவமைப்பில் மின்சார ரெயில் அரக்கோணம்-ஆவடி இடையே ஏ.சி.பெட்டிகளுடன் ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை

ஆவடியில் இருந்து நீராவி ரெயில் என்ஜின் போன்று வடிவமைக்கப்பட்ட மின்சார ரெயில் 4 ஏ.சி. பெட்டிகளுடன் சோதனை ஒட்டமாக அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தது. இது குறித்து ரெயில்வே அலுவலர்கள் தெரிவித்த போது சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இந்த நீராவி ரெயில் என்ஜின் பெட்டிகளின் முன் புறம் மற்றும் பின்புறமும் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் சோதனை ஓட்டமாக ஆவடியில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்பட்டது என்றனர். நீராவி ரெயிலை பார்த்த பயணிகள் ஆரம்ப காலத்தில் பயணித்த பழமையான நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.


Next Story