அறச்சலூரில் மின்சார ஸ்கூட்டரில் புகை வந்ததால் பரபரப்பு


அறச்சலூரில் மின்சார ஸ்கூட்டரில் புகை வந்ததால் பரபரப்பு
x

அறச்சலூரில் மின்சார ஸ்கூட்டரில் புகை வந்ததால் பரபரப்பு

ஈரோடு

சென்னிமலை

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள சங்கரன்காட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 38). இவர் நேற்று வீட்டிலிருந்து அறச்சலூரில் உள்ள ஒரு வங்கியில் பணம் எடுப்பதற்காக தனது மின்சார ஸ்கூட்டரில் சென்றார். பின்னர் வங்கியின் முன்பு ஸ்கூட்டரை நிறுத்தினார். அப்போது திடீரென ஸ்கூட்டரில் இருந்து புகை வந்தது. உடனே வங்கியில் இருந்த தீ தடுப்பானை கொண்டு வந்து பயன்படுத்தி, ஸ்கூட்டரில் இருந்து புகை வராமல் தடுக்கப்பட்டது. இந்த ஸ்கூட்டரை சுப்பிரமணி கடந்த 9 மாதங்களுக்கு முன்புதான் ஈரோட்டில் வாங்கி இருந்தார். அதனால் அந்த ஸ்கூட்டர் நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தினர் அறச்சலூர் வந்து புகை வந்த ஸ்கூட்டரை கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story