மின்சாரம் தாக்கி முதியவர் பலி

வடுவூர் அருகே வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி முதியவர் உயிாிழந்தார்.
வடுவூர்;
வடுவூர் அருகே வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி முதியவர் உயிாிழந்தார்.
மின்சாரம் தாக்கி சாவு
திருவாரூர் மாவட்டம், வடுவூர் அருகே உள்ள எடமேலையூர் தெற்கு கண்டியர் தெருவை சேர்ந்தவர் குமாரசாமி(வயது67). இவர் நேற்று காலை தனது வயலுக்கு சென்றார். அப்போது வயலில்மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்தது. இதை கவனிக்காத குமாரசாமி எதிர்பாராதவிதமாக மின்கம்பி மீது கால் வைத்தார். இதனால் மின்சாரம் தாக்கி குமாரசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பிரேத பரிசோதனை
இதுகுறித்து தகவல் அறிந்த வடுவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குமாரசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் எடமேலையூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.