மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
x

திருவையாறு அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.

தஞ்சாவூர்

திருவையாறு;

திருவையாறு அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.

மின்சாரம் தாக்கியது

திருவையாறு அருகே உள்ள கருப்பூர் புதுத்தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது48). கூலித்தொழிலாளியான இவர் நேற்று கருப்பூர் படுகை ரோட்டில் உள்ள ரெங்கராஜ் என்பவருடைய வாழை தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தில் வேலை செய்பவர்கள் ரவிச்சந்திரனை காணவில்லை என்று தேடிபார்த்தபோது அருகில் உள்ள அழகர் என்பவருடைய மின்மோட்டார் அறையில் மின்சாரம் தாக்கி ரவிச்சந்திரன் இறந்து கிடந்தார்.

வழக்குப்பதிவு

இது குறித்து தகவல் அறிந்த நடுக்காவேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரவிச்சந்திரன் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த ரவிச்சந்திரனுக்கு ராதிகா (38) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.


Next Story