அமானி கொண்டலாம்பட்டியில் 15 வீடுகளில் மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின


அமானி கொண்டலாம்பட்டியில் 15 வீடுகளில் மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின
x
தினத்தந்தி 3 July 2023 1:32 AM IST (Updated: 3 July 2023 3:40 PM IST)
t-max-icont-min-icon

அமானி கொண்டலாம்பட்டியில் 15 வீடுகளில் மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சேலம்

கொண்டலாம்பட்டி

சேலம் அமானி கொண்டலாம்பட்டி பிள்ளையார்நகர் கரட்டூரில் நேற்று மாலை 7 மணி அளவில் உயர்மின்னழுத்தம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் இருந்த 15 வீடுகளில் மின்விசிறி, டி.வி. உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

அப்போது மின்வினியோகத்தில் அடிக்கடி உயர்மின் அழுத்தம் ஏற்பட்டு வீட்டில் மின்சாதன பொருட்கள் பழுதாகிறது என்று அதிகாரிகளுடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்ததுடன், இதுபோன்று இனி பிரச்சினை வராது என்று கூறினர். அப்போது அங்கு நீண்ட நாட்களாக எரியாத மின்விளக்குகளையும் சரிசெய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் முறையிட்டனர்.

1 More update

Next Story