நாகை புதிய கடற்கரையில் மின்சார பெட்டி சீரமைக்கப்பட்டது


நாகை புதிய கடற்கரையில் மின்சார பெட்டி சீரமைக்கப்பட்டது
x

நாகை புதிய கடற்கரையில் மின்சார பெட்டி சீரமைக்கப்பட்டது

நாகப்பட்டினம்

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக நாகை புதிய கடற்கரையில் திறந்து கிடந்த மின்சார பெட்டி சீரமைக்கப்பட்டது.

ஆபத்தான மின்சார பெட்டி

நாகையில் பொழுதுபோக்கு அம்சமாக புதிய கடற்கரை உள்ளது. வேளாங்கண்ணிக்கு அடுத்தபடியாக விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கூடும் முக்கிய கடற்கரையாகவும் உள்ளது. இந்த கடற்கரையில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு பயன்படுத்தப்படும் மின்சார பெட்டி திறந்த நிலையில் இருந்தது. அதில் உள்ள ஒயர்கள் வெளியே தெரியும் படி காட்சியளித்தது.இதனால் கடற்கரைக்கு சிறுவர்களுடன் வரும் பொதுமக்களும், நடைபயிற்சி செய்பவர்களும் அருகில் சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அச்சப்பட்டு வந்தனர்.

எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு புதிய கடற்கரையில் ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கும் மின்சார பெட்டியை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி படத்துடன் 'தினத்தந்தி'யில் வெளியானது.

சீரமைக்கப்பட்டது

இதன் எதிரொலியாக நாகை புதிய கடற்கரையில் ஆபத்தான நிலையில் இருந்த மின்சார பெட்டி சீரமைக்கப்பட்டது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், சீரமைக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story