மின்சாதன பொருட்கள் கடையில் தீ; ஏராளமான பொருட்கள் நாசம்


மின்சாதன பொருட்கள் கடையில் தீ;  ஏராளமான பொருட்கள் நாசம்
x

ராஜபாளையத்தில் மின்சாதன பொருட்கள் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான பொருட்கள் நாசமாகின.

விருதுநகர்

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பெரிய சுரைக்காய்பட்டியை சேர்ந்த பசும்பொன் என்பவர் புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் உள்ள ஐ.என்.டி.யு.சி. நகர் எதிரே மின்சாதன பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். தளத்தை இரண்டாக பிரித்து, கீழ் பகுதியில் மின் மோட்டார்கள், நீர் மூழ்கி மோட்டார்கள், சின்டெக்ஸ் தொட்டிகள், டைல்ஸ் பொருட்கள், இரும்பு வலைகள் உள்ளிட்டவற்றையும், மேல் பகுதியில் பி.வி.சி. குழாய்கள், மின் வயர்கள் உள்ளிட்ட பொருட்களையும் வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையின் ஒரு பகுதியில் பற்றிய தீ, அனைத்து இடங்களிலும் பரவியது. இதுகுறித்த தகவலின்பேரில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை கட்டுப்படுத்த நீண்ட நேரமாக போராடினர். இந்த சம்பவத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. மின் கசிவே தீ விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தெற்கு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.



Related Tags :
Next Story