தன்னார்வலர்குளுக்கு மின் பாதுகாப்பு- பேரிடர் கால பயிற்சி முகாம்
நெல்லையில் தன்னார்வலர்குளுக்கு மின் பாதுகாப்பு- பேரிடர் கால பயிற்சி முகாம் நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் பேரிடர் மீட்பு பயிற்சி குழு சார்பில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் நேற்று மின் பாதுகாப்பு மற்றும் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நெல்லை மண்டல மின் பாதுகாப்பு அதிகாரி பேச்சிமுத்து கலந்து கொண்டு பயிற்சிகள் வழங்கினார்.
மேலும் வினியோகத்தில் உள்ள மின் பாதைகள் பற்றியும், மின்மாற்றிகளின் செயல்பாடுகள் பற்றியும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியின் போது 5 தன்னார்வலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story