தாய், மகளை தாக்கிய எலக்ட்ரீசியன் கைது


தாய், மகளை தாக்கிய எலக்ட்ரீசியன் கைது
x

தாய், மகளை தாக்கிய எலக்ட்ரீசியன் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் சித்ரா (வயது 40). அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் நாகராஜ் (47), சப்-ஜெயில் வார்டனான ராஜா (46), கூலி தொழிலாளி ஆறுமுகம் (49) ஆகியோர் சம்பவத்தன்று சித்ராவையும் அவரது மகளையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சித்ரா கொடுத்த புகாரின் பேரில் வாங்கல் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தார். மேலும், இந்த வழக்கில் தலைமறைவான ராஜா, ஆறுமுகம் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story