மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் எலக்ட்ரீசியன் பலி
பரமத்திவேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.
பரமத்திவேலூர்
எலக்ட்ரீசியன்
பரமத்திவேலூர் அருகே கட்டமராபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 64). எலக்ட்ரீசியன். மேலும் சாமியான பந்தல் அமைக்கும் பணி செய்து வந்தார். இந்நிலையில் சுப்ரமணி தனது மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு மோகனூரில் இருந்து வேலூர் செல்வதற்காக திருமணிமுத்தாறு பாலம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது குப்புச்சிபாளையத்தில் இருந்து காமாட்சி நகர் நோக்கி எதிர்திசையில் வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சுப்ரமணி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பலி
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுப்ரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்திவேலூர் போலீசார் சுப்ரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்ரமணி மீது மோதிய விட்டு தலைமறைவான கார் டிரைவர் மோகனை வலைவீசி தேடி வருகின்றனர்.