சேத்தியாத்தோப்பு அருகே எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
சேத்தியாத்தோப்பு அருகே எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்
சேத்தியாத்தோப்பு அருகே பு.ஆதனூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மனோகரன் மகன் சுனில்குமார் (வயது 21). இவர் சென்னையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுனில்குமாரின் சித்தப்பா இறந்து விட்டார். இதை கேள்விப்பட்டு சுனில்குமார் ஊருக்கு வந்தார். பின்னர் அவரது உடலை அடக்கம் செய்து விட்டு, மன உளைச்சலில் இருந்த சுனில்குமார் தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டுக்கொண்டார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சுனில்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி மனோகரன் சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story