வாடிப்பட்டி அருகே வேன் மோதி எலக்ட்ரீசியன் பலி


வாடிப்பட்டி அருகே வேன் மோதி எலக்ட்ரீசியன் பலி
x

வாடிப்பட்டி அருகே வேன் மோதி எலக்ட்ரீசியன் பலியானார்

மதுரை

வாடிப்பட்டி,

சோழவந்தான் அருகே நெடுங்குளம் களத்து வீடு பகுதியை சேர்ந்தவர் ஆண்டார் மகன் நாகராஜன் (வயது 29). எலக்ட்ரீசியன். இவர் நேற்று அய்யங்கோட்டையில் இருந்து நகரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நகரி சுடுகாடு முன்பாக சென்றபோது அய்யங்கோட்டை நோக்கி வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜன் சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்- இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

1 More update

Next Story